search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயி கொலை"

    • பெருமாள் தனக்கு விற்ற நிலத்தை புறம்போக்கு நிலம் என்று கூறியதாலும், வீடு கட்டவிடாமல் தடுத்ததாலும் மதன் ஆத்திரம் அடைந்தார். அங்கிருந்த கல்லை எடுத்து பெருமாளை தாக்கினார்.
    • பெருமாள் சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து மதன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்த கோளிவாக்கம் நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 70). விவசாயி. வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 3 மகள்கள், 1 மகன் உள்ளனர்.

    பெருமாள் சில வருடங்களாக தனியாக வசித்து வந்தார். பெருமாள் அதே பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான ஒரு நிலத்தை உத்திரமேரூர் மருதம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மதன் என்பவருக்கு விற்றார்.

    மதனின் மனைவி கோளிவாக்கத்தை சேர்ந்தவர் என்பதால் அந்த நிலத்தில் வீடு கட்ட மதன் முடிவு செய்தார். இதற்காக கல், மண் போன்றவற்றை அங்கு இறக்கினார்.

    இன்று காலையில் அங்கு வந்த பெருமாள், இது புறம்போக்கு நிலம். இதில் வீடு கட்டக்கூடாது என்று மதனிடம் கூறினார்.

    பெருமாள் தனக்கு விற்ற நிலத்தை அவரே புறம்போக்கு நிலம் என்று கூறியதாலும், வீடு கட்டவிடாமல் தடுத்ததாலும் மதன் ஆத்திரம் அடைந்தார். அங்கிருந்த கல்லை எடுத்து பெருமாளை தாக்கினார்.

    இதில் பெருமாள் சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து மதன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    தகவல் அறிந்ததும் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், டி.எஸ்.பி. ஜூலியர் சீசர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

    இதுதொடர்பாக காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மின்சார ஒயர் கம்பியால் கழுத்து நெறிக்கப்பட்டு இறந்த நிலையில் கிடந்தார்.
    • சந்தேகத்தின் பேரில் மூன்று பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள சிட்லிங் கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன். இரவு நேரத்தில் காவலுக்காக தோட்டத்தில் உள்ள கொட்டகையில் படுத்திருந்திருக்கிறார்.

    காலை 8 மணிக்கு வீட்டிற்கு பால் எடுத்து வருவது வழக்கம். நீண்ட நேரம் தோட்டத்திலிருந்து வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி தங்கம்மாள் தோட்டத்திற்கு சென்று பார்த்த பொழுது கழுத்தில் மின்சார ஒயர் கம்பியால் கழுத்து நெறிக்கப்பட்டு இறந்த நிலையில் கிடந்தார்.

    சம்பவம் குறித்துதங்கம்மாள் தனது உறவினர்களுக்கு தகவல் கொடுத்திருக்கிறார். உறவினர்கள் அனைவரும் தோட்டத்திற்கு சென்று பார்த்த பிறகு இது குறித்து கோட்டப்பட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவலின் பேரில் கோட்டப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி தருமபுரி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் மூன்று பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வெங்கடசாமி, கொடூரமான முறையில் இறந்து கிடந்தார்.
    • யாரேனும் கொலை செய்து போட்டு சென்றார்களா? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் பெரியகோட்டப்பள்ளி பக்கமுள்ள பெத்தளப்பள்ளியை சேர்ந்தவர் வெங்கடசாமி (வயது 65). விவசாயி. இவர் நேற்று முனதினம் வழக்கம் போல தனது விவசாய நிலத்திற்கு வேலைக்காக சென்றார்.

    மாலை அவரது நிலம் வழியாக பொதுமக்கள் சிலர் சென்றனர். அந்த நேரம் அங்கு வெங்கடசாமி, கொடூரமான முறையில் இறந்து கிடந்தார். அவரது கை, கால், தொடை மற்றும் கழுத்து பகுதியில் தோல்கள் உரிந்த நிலையில் இருந்தது.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது குறித்து அவரது மகன் ஆனந்தனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் இது குறித்து மகராஜகடை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் பிணமாக கிடந்த வெங்கடசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    முதியவர் வெங்கடசாமியை யாரேனும் கொலை செய்து போட்டு சென்றார்களா? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக சந்தேக மரணம் பிரிவின் கீழ் மகராஜகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வாலிபர் கைது

    குடியாத்தம்:

    குடியாத்தம் அடுத்த உப்பிரபல்லி கொல்லிமேடு பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவருக்கு கோவிந்தசாமி, ரவி (வயது 60), பாபு என்ற 3 மகன்கள் உள்ளனர்.

    இதில் கோவிந்தசாமியும், பாபுவும் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டனர். இவர்களுக்கு சொந்தமாக நிலம் உள்ளது. நிலம் சம்பந்தமாக கோவிந்தசாமி குடும்பத்தினருக்கும், பாபு குடும்பத்தினருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் ரவி கடந்த 14-ந் தேதி தனது அக்கா லைலா வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த கோவிந்த சாமியின் மகன் ராஜேந்திரன் ( 28) என்பவர் தனது சித்தப்பா ரவியை அழைத்து நிலம் சம்பந்தமாக பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

    இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக தெரிகிறது.

    இதில் ஆத்திரமடைந்த ராஜேந்திரன் ரவியை சரமாரியாக தாக்கியுள்ளார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த ரவியை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் போலீசார் ராஜேந்திரன் மீது வழக்கு பதிவு செய்து கைது கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரவி இன்று காலை பரிதாபமாக இறந்தார். இதனைத் தொடர்ந்து குடியாத்தம் போலீசார் ராஜேந்திரன் மீது கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மைதுகனியின் வயலுக்கு அருகே புளியங்குடியை சேர்ந்த சகோதரரான 2 பேருக்கு சொந்தமான வயல் உள்ளது.
    • மைதுகனியை வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற நேரத்தில் அவர்கள் 2 பேரும் வெட்டிக்கொலை செய்திருக்கலாமா? அல்லது வேறு யாரேனும் இதனை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புளியங்குடி:

    தென்காசி மாவட்டம் புளியங்குடியை அடுத்த சிந்தாமணி அம்பேத்கார் 1-வது தெருவை சேர்ந்தவர் மைது கனி(வயது 46). விவசாயி. இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

    புளியங்குடி நவசாலை ஊருக்கு சற்று தொலைவில் உள்ள காடுவெட்டி குளத்திற்கு அருகே ராஜசேகர் என்பவருக்கு சொந்தமான நிலத்தை மைதுகனி குத்தகைக்கு எடுத்து பயிரிட்டு வந்தார்.

    நேற்று மாலை மைதுகனி வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றார். வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது உறவினர்கள் அவரை தேடி வயலுக்கு சென்றனர். அப்போது வயல் பாதையில் மைதுகனி வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் புளியங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்டு கிடந்த மைதுகனி உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, மைதுகனியை கொலை செய்தவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மைதுகனியின் வயலுக்கு அருகே புளியங்குடியை சேர்ந்த சகோதரரான 2 பேருக்கு சொந்தமான வயல் உள்ளது.

    இவர்களுக்கும், மைதுகனிக்கும் வயலில் பயிர் வைப்பது சம்பந்தமாக இடப்பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. சமீபத்தில் மைதுகனி வளர்த்து வந்த நாய், அந்த தரப்பினரின் கோழிகளை கடித்துக்கொன்றதாகவும், அது தொடர்பாகவும் 2 தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதனால் மைதுகனியை வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற நேரத்தில் அவர்கள் 2 பேரும் வெட்டிக்கொலை செய்திருக்கலாமா? அல்லது வேறு யாரேனும் இதனை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நிலம் சம்பந்தமான பிரச்சினையால் ஆத்திரம்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த நாரணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி (வயது 50). விவசாயம் செய்து வந்தார். இவருக்கும் இவரது சகோதரி மகன் அஜித் (22) என்பவருக்கும் ஏற்கனவே நிலம் சம்பந்தமாக பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இது சம்பந்தமாக ஜோதி மீது அரக்கோணம் தாலுகா போலீஸ் நிலையத்தில் வழக்கு இருப்பதாகவும் தெரிகிறது.

    இந்த நிலையில் நேற்று மாலை ஜோதி வீட்டில் இருந்து வெளியே சென்றார். அப்போது அவரை அஜித் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அஜித் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜோதியை வெட்டினார். பின்னர் ஜோதி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். அஜித் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் அரக்கோணம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஜோதியின் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அஜித்தை தேடி வருகின்றனர்.

    சொத்திற்காக மாமா என்று கூட பார்க்காமல் வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அய்யாத்துரை மாமனார் கருத்தப்பாண்டி கொடுத்த நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார்.
    • சின்னப்பாண்டி மற்றும் அலங்காரம் ஆகியோருக்கும் அய்யாத்துரைக்கும் முன்விரோதம் இருந்து வருகிறது.

    புளியங்குடி:

    புளியங்குடி அருகே உள்ள சிந்தாமணிபேரிபுதூரை சேர்ந்தவர் அய்யாத்துரை (வயது43). இவரது மனைவி கலாவதி.

    வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த அய்யாத்துரை தற்போது சொந்த ஊரில் விவசாயம் செய்து வந்தார். இந்நிலையில் அய்யாத்துரை நேற்று கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அதில் அய்யாத்துரை மாமனார் கருத்தப்பாண்டி கொடுத்த நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார்.

    இந்த நிலம் தொடர்பாக கருத்தபாண்டியின் சகோதரர்களான சின்னப்பாண்டி மற்றும் அலங்காரம் ஆகியோருக்கும் அய்யாத்துரைக்கும் முன்விரோதம் இருந்து வருகிறது.நேற்று அய்யாத்துரை தென்னந்தோப்புக்கு சென்ற போது அங்கு வந்த அலங்காரம், சின்னப்பாண்டி, சின்னபாண்டி மனைவி பேச்சியம்மாள் ஆகிய 3 பேர் வழிமறித்து அரிவாளால் வெட்டி கொன்றது தெரியவந்தது.

    இதையடுத்து புளியங்குடி சின்னப்பாண்டியை கைது செய்தனர். அவரிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய அரிவாளையும் கைப்பற்றினர். மேலும் தலைமறைவாக உள்ள அலங்காரத்தையும், பேச்சியம்மளையும் தேடி வருகின்றனர். 

    • கண் இமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் சந்திரனை சரமாரியாக வெட்டியது.
    • இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே ராமாபுரம் மதுரா பக்ரிமணியம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன் (வயது 60). விவசாயி. இவர் இன்று அதிகாலை அந்த பகுதியில் உள்ள சாலையோரம் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் சந்திரனை சுற்றிவளைத்தனர். கண் இமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் சந்திரனை சரமாரியாக வெட்டியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பிணமானார். இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் சந்திரன் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனால் ஏராளமானோர் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த ஸ்ரீமுஷ்ணம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து சந்திரனை கொலை செய்த நபர்கள் யார் எதற்காக கொலை செய்தனர் என்பது குறித்து தீவிரமாக துப்புதுலக்கி வருகிறார்கள்.

    • மாலையின் தம்பி மகன் அதே பகுதியில் வசிக்கும் ஒருவரது உறவினர் மகளை காதலித்து திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.
    • பழிக்குப்பழியாக நடைபெற்ற இந்த கொலை சம்பவத்தால் சேரன்மகாதேவி பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி சந்தனமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி என்ற ராசு(வயது 62).

    இவர் நேற்று மாலை சேரன்மகாதேவி கூட்டுறவு பால்பண்ணையில் பால் கொடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். பால்பண்ணை உள்ளே அவர் செல்லவும், அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கும்பல் அவரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது.

    இதுதொடர்பாக சேரன்மகாதேவி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபாஷ்ராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே தெருவில் வசிக்கும் மாலை என்பவரது மனைவி மாரியம்மாள் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அதற்கு பழிக்குப்பழியாக இந்த சம்பவம் நடந்திருப்பது தெரியவந்தது.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாலையின் தம்பி மகன் அதே பகுதியில் வசிக்கும் ஒருவரது உறவினர் மகளை காதலித்து திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் 2 தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துவந்துள்ளது.

    இந்தநிலையில் தான் கடந்த 24-ந்தேதி இருதரப்பிரனருக்கும் இடையே மதுபோதையில் தகராறு ஏற்பட்டு அதில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாலையின் மனைவி மாரியம்மாளை எதிர்தரப்பை சேர்ந்த நடராஜன் மகன்கள் சுரேஷ், ஆறுமுகம், கணேசன் மற்றும் அவர்களது உறவினர்கள் 2 பேர் சேர்ந்து கொலை செய்தனர்.

    இதனால் எதிர்தரப்பினர் அனைவரையும் போலீசார் ஊரை விட்டு வெளியேற்றினர். இந்த நிலையில் நடராஜனின் உறவினரான முத்துபாண்டியன் நேற்று பால் கொண்டு வந்தபோது 6 பேர் கும்பல் அவரை கொலை செய்தது என்பது தெரியவந்ததது. அவரது மகன் ஒருவருக்கு சமீபத்தில் நடந்த மாரியம்மாள் கொலையில் தொடர்பு இருந்ததாக நினைத்து எதிர்தரப்பினர் இந்த கொலையை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன் உத்தரவின் பேரில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலை கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    பழிக்குப்பழியாக நடைபெற்ற இந்த கொலை சம்பவத்தால் சேரன்மகாதேவி பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது. எனவே அங்கு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • செஞ்சியில் பரபரப்பு நிலத் தகராறில் விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
    • ஏலம் முறையினால் நிலம் கைவிட்டு மாறிப்போனதால் ஆத்திரத்தில் இருந்த தர்மராஜுக்கும் அரங்க நாதனுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே குறிஞ்சிப்பை பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 70) விவசாயி அதே பகுதியில் பட்டாபிராமர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான 2.77 ஏக்கர் நிலத்தை ஆண்டு தோறும் டெண்டர் முறையில் ஏலம் விடுவார்கள். தற்போது டெண்டர் முறையில் விடப்பட்ட அந்த நிலத்தை தர்மராஜ் பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று மறு ஏலம் விடப்பட்டது. அந்த மறு ஏலத்தில் அதே பகுதியை சேர்ந்த அரங்கநாதன் என்பவர் அதிகமான தொகைக்கு கேட்டதால் அவருக்கு நிலம் டெண்டர் முறையில் விடப்பட்டது. 

    இன்று காலை அரங்க நாதன் அந்த நிலத்திற்கு சென்றார். அப்போது அங்கு தர்மராஜ் இருந்தார். நடைபெற்ற டெண்டர் ஏலம் முறையினால் நிலம் கைவிட்டு மாறிப்போனதால் ஆத்திரத்தில் இருந்த தர்மராஜுக்கும் அரங்க நாதனுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. அந்த வாய் தகராறு சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியது. இதில் அரங்கநாதன் தர்மராஜை தாக்கினார். இதில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே தர்மராஜ் இறந்தார். இது குறித்த தகவல் அறிந்த செஞ்சி போலீஸ் டி.எஸ்பி. பிரியதர்ஷினி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த தர்மராஜின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரதேச பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள அரங்கநாதனை தேடி வருகின்றனர். 

    • கொலை நடந்த இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொலையாளிகளின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன.
    • முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது சொத்து தகராறில் அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அலங்காநல்லூர்:

    மதுரை மாவட்டம் பாலமேடு அருகே மறவபட்டி கிராமத்தை சேர்ந்தவர் நல்லதம்பி (வயது 65). விவசாயி. இவர் நேற்று இரவு தனது தோட்டத்திற்கு சென்றார். அவர் நீண்ட நேரமாக வீடு திரும்பவில்லை. மழை பெய்ததால் அவர் வரவில்லை என்று குடும்பத்தினர் அங்கு சென்று பார்க்கவில்லை.

    இந்த நிலையில் நல்லதம்பி இன்று காலை வரை வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் தோட்டத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது அவர் கழுத்தறுக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரிய வந்தது.

    இதுபற்றி நல்லதம்பியின் மகன், பாலமேடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் மீனாட்சி சுந்தரம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட நல்லதம்பி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலை நடந்த இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொலையாளிகளின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் மோப்பநாய் மூலம் துப்புதுலக்கப்பட்டது.

    இந்த கொலை எதற்காக நடைபெற்றது? என்பது தெரியவில்லை. முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது சொத்து தகராறில் அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம் பாலமேடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வேடசந்தூர் அருகே சொத்துப்பிரச்சினை காரணமாக முதியவர் அடித்து கொலை செய்யப்பட்டார்.
    • இந்த கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பெரிய குளத்துப்பட்டியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (வயது 62). இவர் தனது மனைவி குழந்தைதெரசு என்பவருடன் சவேரியார்பட்டி ஒத்தையூரில் உள்ள தனது மாமனார் அமல்ராஜ் வீட்டில் வசித்து வந்தார்.

    ஆரோக்கியசாமிக்கும் அவரது தம்பி செபஸ்தியார் குடும்பத்தினருக்கும் இடையே 7 ஏக்கர் அளவுள்ள பூர்வீக நிலத்தை விற்பது தொடர்பாக கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வந்தது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நிலத்தை விற்பதற்கு செபஸ்தியார் ஏற்பாடு செய்துள்ளார். ஆனால் ஆரோக்கியசாமி நிலத்தை விற்க எதிர்ப்பு தெரிவித்து, பத்திரத்தில் கையெழுத்து போட மறுத்தார்.

    இதனால் ஆத்திரமடைந்த செபஸ்தியார் தனது மகன்களான பிரவீன்குமார், அருண்குமார் ஆகியோருடன் ஒத்தையூரில் உள்ள ஆரோக்கியசாமியின் வீட்டிற்கு சென்றார். அங்கு அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பிரவீன்குமார், வீட்டிலிருந்த மரக்கட்டையால் ஆரோக்கியசாமியின் தலையில் கொடூரமாக தாக்கி கொலை செய்தார். அதன் பின்னர் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து வேடசந்தூர் டி.எஸ்.பி. மகேஷ் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. தனிப்படையினர் பாசித்ரகுமான், பாலாஜி, நாகராஜ் ஆகியோர் விரைந்து செயல்பட்டு பிரவீன்குமாரை கைது செய்தனர். பின்னர் தலைமறைவாக இருந்த செபஸ்தியார் மற்றும் அருண்குமாரையும் பிடித்து வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி வழக்குபதிவு செய்து கைதான பிரவீன்குமார், அருண்குமார், செபஸ்தியார் ஆகிய 3 பேரையும் வேடசந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

    ×